அரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை-ஆற்றோரத்தில் நிறுத்திய கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம்

அரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் ஆற்றோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.

Update: 2022-10-17 19:30 GMT

அரூர்:

கொட்டித்தீர்த்த கனமழை

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக அரூர் அடுத்த கோட்டப்பட்டி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த நிலையில் செலம்பை ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆசிரமத்தின் அருகே கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்டது.

கார் சேதம்

மலைப்பகுதி என்பதால் அங்கு பெய்த மழை நீர் வெள்ளமாக பாய்ந்தோடி வந்ததில் ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் அடித்து செல்லப்பட்டு பலத்த சேதம் அடைந்தது. அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்துவரும் கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது. அரூர் வாணியாற்றிலும் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. ஆனால் அதனை ஒட்டிய சுமார் 100 ஏக்கர் பரப்பிலான ஏரிக்கு தண்ணீர் வரத்து இன்றி சிறிதளவே தண்ணீர் நிரம்பி காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்