கால்வாயில் கவிழ்ந்த கார்
கொங்கராம்பட்டு பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்தது
கண்ணமங்கலம்
வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர் 5 சிறுவர் சிறுமிகள் உள்பட 10 பேர் காரில் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் லத்தேரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் வேலூர் செல்லும் சாலையில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாடு இழந்து கார் சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.