மேல்மருவத்தூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

மேல்மருவத்தூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-03-12 12:50 GMT

சென்னையைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூரில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக உறவினர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு நேற்று காலை சென்னையில் இருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி வந்தக்கொண்டிருந்தார்.

அப்போது மேல்மருவத்தூர் பஸ் நிலையம் அருகே வரும்போது காரில் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட அலெக்ஸ் காலை சாலையோரத்தில் நிறுத்தினார். சில நிமிடங்களில் கார் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே காரில் பயணித்தவர்கள் சுதாரித்து கொண்டு வேகமாக காரில் இருந்து இறங்கினர். விபத்து குறித்து அச்சரப்பாக்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். இதில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்