சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்... லாரி மீது மோதி தீ பிடித்து விபத்து

பூந்தமல்லி அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த கார், கண்டெய்னர் லாரி மீது மோதி, கொழுந்துவிட்டு எரிந்தது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-02-19 17:36 GMT

சென்னை,

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் கிருத்திகா. மெக்கானிக்கல் என்ஜினியரான இவர், தனது காரில் பூந்தமல்லி அருகே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

சாலையில் சென்றவர்கள் கிருத்திகாவை உடனடியாக மீட்ட நிலையில், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடான நிலையில், சந்தேகத்திற்கிடமான கண்டெய்னரை திறந்து பார்க்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்