கார் மோதி மின்கம்பம் சாய்ந்தது

கடையம் அருகே பொட்டல்புதூரில் கார் மோதி மின்கம்பம் சாய்ந்தது.

Update: 2022-07-24 17:16 GMT

கடையம்:

தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி நேற்று கார் வந்து கொண்டிருந்தது. கடையம் அருகே பொட்டல்புதூர் வந்தபோது திடீரென்று அங்குள்ள மின்கம்பத்தில் கார் மோதியது. இதனால் மின்கம்பம் அடியோடு சாய்ந்து மின்சாரம் முற்றிலுமாக தடைப்பட்டது.

தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி மின் உதவி பொறியாளர் விஜயராஜ் மற்றும் மின் பணியாளர்கள் ராமசாமி, இசக்கிராஜன், மாரிகணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாய்ந்த மின் கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பத்தினை நட்டு மின்சாரம் வழங்கினர். மின்கம்பத்தில் மோதிய விபத்தில் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்