மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது; அரசு அலுவலர் உள்பட 2 பேர் படுகாயம்

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அரசு அலுவலர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-11 19:22 GMT

கார் மோதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). இவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அலுவலராக கலந்து கொண்டு விட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

காலாடிப்பட்டி சத்திரம் எனும் இடத்தில் சென்ற போது பின்னால் வந்த கார் மகேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் படுகாயம்

இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் படுகாயம் அடைந்தார். பின்னர் கட்டுப்பாட்டை இழந்த காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிசென்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (55) படுகாயம் அடைந்தார். இதையடுத்து அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்