மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
காரைக்குடி, மானாமதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காரைக்குடி
காரைக்குடி, மானாமதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காரைக்குடி
மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து காரைக்குடி 5 விளக்கு அருகில் மகளிர் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி இமயமடோனா, மாவட்ட துணைத் தலைவர்கள் காந்தி, அப்பச்சி சபாபதி, கல்லல் ஒன்றிய குழு உறுப்பினர் அழகப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, வக்கீல் பிரிவு மாநில இணைச்செயலாளர் ராமநாதன், வட்டார தலைவர் கருப்பையா, நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோஜ், மாவட்ட குழு உறுப்பினர் சண்முகதாஸ், எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் கருப்பையா, மகளிரணி, நகரத் தலைவி கலா உள்ளிட்ட மகளிர் காங்கிரசார், மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மானாமதுரை
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மானாமதுரையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வட்டார தலைவர்கள் ஆரோக்கியதாஸ், கரு.கணேசன், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சோனைராஜ், எஸ்.சி.எஸ்.டி.நகர தலைவர் பழனிவேல்ராஜன், நிர்வாகிகள் காசி, ஐசக் பாஸ்கரன், முத்துகருப்பன் வக்கீல் ரமேஷ் கண்ணன், ஜான்போஸ்கோ, ராமு, முத்துகுமார், பாண்டியம்மாள், செந்தாமரை, சீதை உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், கீழச்செவல்பட்டி நகர் காங்கிரஸ் தலைவர் அழகுமணிகண்டன், கல்லல் ஒன்றிய குழு துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேதுமெய்யப்பன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் சவுமியன், வட்டார காங்கிரஸ் தலைவர் இருதயராஜ், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.