மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம்

Update: 2023-03-26 18:45 GMT

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. முகாமில் முடநீக்கு சாதனம், மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ரோலேட்டர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு டி.எல்.எம். கிட், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி போன்ற உபகரணங்களில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப உபகரணங்கள் தேர்வு செய்து 2 மாதங்களில் வழங்கப்பட உள்ளது. இதில் உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளை அவர்களின் ஆதார் அட்டை நகல், யூ.டி.ஐ.டி. கார்டு நகல், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், புகைப்படம் மற்றும் வருமானச் சான்று ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்