மகுடஞ்சாவடியில் சரக்கு லாரி மீது பஸ் மோதியது; டிரைவர் உள்பட 17 பேர் காயம்

மகுடஞ்சாவடியில் சரக்கு லாரி மீது பஸ் ேமாதியது. இதில் டிரைவர் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-10-14 22:56 GMT

இளம்பிள்ளை, 

லாரி மீது மோதியது

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சேலத்திற்கு நேற்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார்.

இவர், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி மேம்பால பகுதியில் பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

17 பேர் காயம்

இதில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் அய்யனார் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்சு மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயம் அடைந்தவர்களில் வெங்கடேசன், பார்வதி, சண்முகம், செந்தில், சந்திரா உள்பட 6 பேரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்