தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த கட்டிட மேற்பார்வையாளர் சாவு
தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த கட்டிட மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.
பொன்மலைப்பட்டி:
கட்டிட மேற்பார்வையாளர்
திருச்சி பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தர் ஆரோக்கியராஜ்(வயது 61). இவர் திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்று வரும் தனியார் கட்டிடப் பணியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12-ந் தேதி காதண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த கட்டிட மேற்பார்வையாளர் சாவுலை பணி செய்யும் இடத்தில் தண்ணீர் என நினைத்து பெயிண்டில் கலக்கும் தின்னரை எடுத்து சுந்தர் ஆரோக்கியராஜ் சிறிதளவு குடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மாலையில் வீட்டிற்கு சென்ற அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சாவு
இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.