மலை அடிவாரத்தில் இறந்து கிடந்த காட்டெருமை
மலை அடிவாரத்தில் காட்டெருமை இறந்து கிடந்தது.;
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான தாழையூத்து பகுதியில் ஒரு காட்டெருமை அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. இது குறித்து. தகவலறிந்த உசிலம்பட்டி வனச்சரக வன அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அழுகிய நிலையில் கிடந்த காட்டெருமையின் உடலை மீட்டு அதே இடத்தில் உடற்கூராய்வு செய்து உடலை அடக்கம் செய்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்த காட்டெருமைக்கு 12 வயது இருக்கும். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் உலா வந்திருக்கிறது., தாழையூத்து பகுதியில் உள்ள சுனையில் தேங்கியிருந்த நீரை அருந்த வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.