சாலையில் பழுதடைந்து நின்ற லாரி
நீடாமங்கலத்தில் சாலையில் பழுதடைந்து நின்ற லாரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் மக்கள் அவதியடைந்தனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் நேற்று காலை அந்த வழியாக வந்த ஒரு லாரி திடீரென பழுதடைந்து சாலையின் நடுவே நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பஸ், காா், லாரிகள் மாற்றுப்பாதையில் சென்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். காலை நேரத்தில் லாரி பழுதடைந்து சாலையின் நடுவே நின்றதால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் பின் லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரடைந்தது.