அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள வேம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஓசைப்பட்டியில் இருந்து வெள்ளாளபாளையம் செல்லும் சாலையில் சிறு பாலம் ஒன்று உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த பாலம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அதனால் அந்த பகுதியில் உள்ள கிராமமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள்.
சைக்கிளில் சென்று வந்த மாணவ, மாணவிகளும், கூலி தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே விரைவில் பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.