திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம்
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயமானார்.
காரைக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மகன் பால்ராஜ்(வயது 30). இவருக்கும், ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரையின் மகள் கஸ்தூரிக்கும்(21) கடந்த மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்கள் காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். ேநற்று முன்தினம் இரவு திடீரென கஸ்தூரி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.