பள்ளம் ேதாண்டிய இடத்தில் செங்கல் சுவர்

ஓரியூரில் குடிநீர் தொட்டி அமைக்க பள்ளம் ேதாண்டிய இடத்தில் செங்கல் சுவர் இருந்ததால் அது மன்னர் கால கோட்டையா? என்பது குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2023-01-07 18:50 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் ஓரியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அங்குள்ள கோட்டை மகாலிங்க மூர்த்தி சுவாமி கோவில் அருகில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கு அடியில் செங்கல்லால் ஆன சுவர் இருப்பதை பார்த்துள்ளனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொல்லியல் துறை இதனை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஓரியூர் முன்னாள் ஊராட்சி தலைவர் புலியூர் வெங்கடேசன் கூறும் போது:- ஓரியூரில் சங்க கால மன்னனால் கட்டப்பட்ட மண் கோட்டை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து இந்த பகுதியை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் இங்கு ஒரு கோட்டை கட்டி அரசாட்சி நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சேதுபதி மன்னர்கள் இந்த கோட்டையில் ஒரு அரண்மனையை உருவாக்கியுள்ளனர். அதற்கான சான்றாக சிதலமடைந்த கோட்டை இங்கு உள்ளது. இந்த கோட்டையை ஏற்கனவே தொல்லியல் துறையினர் பலமுறை ஆய்வு செய்து கல்வெட்டுகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த கோட்டையின் ஒரு பகுதியாக இந்த செங்கல் சுவர் இருக்க வேண்டும். எனவே அதை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்