ஜம்பேரியின் கரையில் உடைப்பு

ஜம்பேரியின் கரை உடைந்தது

Update: 2022-09-03 19:40 GMT

உப்பிலியபுரம், செப்.4-

உப்பிலியபுரம் அருகே ஜம்பேரியின் கரை உடைந்தது.

ஜம்பேரி

உப்பிலியபுரம் அருகே உள்ளது ஜம்பேரி. 390 ஏக்கர் பரப்பளவும், 5.5 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்ட ஜம்பேரி திருச்சி மாவட்டத்தில் 2-வது பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரியின் கரை கடந்த ஆண்டு பலப்படுத்தப்பட்டது.

சமீபகாலமாக பெய்து வரும் தொடர்மழையால் புளியஞ்சோலை அய்யாறு, காட்டாறுகளில் இருந்து வந்த வெள்ளத்தால் ஜம்பேரி நிரம்பி தடுப்பணை வழியாக சென்றது. இந்த நிலையில் ஏரியின் தெற்கு கரையில் மண்சரிந்து உடைப்பு ஏற்பட்டது. சுமார் 35 அடி நீளத்திற்கும், 7 அடி அகலத்திற்கும் இந்த உடைப்பு ஏற்பட்டது.

சரிசெய்ய கோரிக்கை

இந்த ஏரியின் கரை உடைப்பை சரிசெய்யாவிட்டால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வாய்ப்பு உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் தளுகை ரமேஷ், ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஜம்பேரி பாசனதாரர்கள் சங்க தலைவர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரையை பலப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்