கிரிக்கெட் விளையாடிய வாலிபர் சுருண்டு விழுந்து சாவு

கிரிக்கெட் விளையாடிய வாலிபர் சுருண்டு விழுந்து சாவு

Update: 2022-12-19 18:45 GMT

துடியலூர்,டிச.20-


கோவை கவுண்டம்பாளையம் அருகில் உள்ள இடையர்பாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் கவுதம் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கவுதம் தனது நண்பர்களுடன் கணுவாய் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றார். அங்கு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் நிலைகுலைந்து மயங்கி சுருண்டு விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு டி.வி.எஸ்.நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு கவுதமை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்ட அவரது நண்பர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து இருந்த சம்பவம் அவரது பெற்றோர், மற்றும் அந்த பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்