மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-13 20:42 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமம் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த செல்வராசுவின் மகன் செல்வகுமார்(வயது 20). இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர், 16 வயதுடைய பள்ளி மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அவரிடம் இருந்து தப்பித்து வந்த மாணவி, இது பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் செல்வக்குமார் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்