சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் கடைக்கு சைக்கிளில் சென்ற 13 வயது சிறுமியை தூக்கிச் சென்று, மறைவான பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.