செல்போனில் விளையாடிய சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

பணகுடியில், செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2023-03-30 20:13 GMT

பணகுடி:

பணகுடியில், செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழிலாளி குடும்பம்

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணா நகரை சேர்ந்தவர் சொரிமுத்து. இவர் செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இதில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.

அவருடைய ஒரே மகன் வசந்தகுமார் (வயது 15). இவன் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தான்.

செல்போன் விளையாட்டு

வீட்டில் இருக்கும்போது வசந்தகுமார் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவான். இதேபோல் நேற்றும் கேம் விளையாடினான்.

காலையில் வேலைக்கு சென்றிருந்த சொரிமுத்து வேைல முடிந்த பின்னர் நேற்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது வசந்தகுமார் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து கண்டித்துள்ளார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த வசந்தகுமார் வீட்டின் அருகில் இருந்த அரளிச்செடியில் காய்களை பறித்து அரைத்து (விஷம்) குடித்துள்ளான். இதை அறிந்த அவனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வசந்தகுமாரை சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் பரிதாபமாக இறந்தான்.

சோகம்

இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்