கீழே கிடந்த பட்டாசை பற்ற வைத்த சிறுவன் படுகாயம்

விராலிமலை அருகே கீழே கிடந்த பட்டாசை பற்ற வைத்த சிறுவன் படுகாயம் அடைந்தான்.

Update: 2023-07-22 18:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா கொடும்பாளூரை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் விஷ்ணு (வயது 10). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது சில பட்டாசுகள் வெடிக்காமல் அப்பகுதியிலேயே கிடந்துள்ளது. இந்தநிலையில் அப்பகுதியில் விளையாட வந்த சிறுவன் விஷ்ணு வெடிக்காமல் கிடந்த பட்டாசை எடுத்து பற்ற வைத்தபோது வெடித்து சிதறியது.

இதில், விஷ்ணுவின் முகம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு திருச்சி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பட்டாசு வெடித்ததில் சிறுவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்