சிங்கம்புணரி
திருப்பத்தூர் டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் பழனிகுமார். இவருைடய மகன் தேவராஜ்(வயது 26). இவர் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் சென்ற போது கிழக்கிபட்டி அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டிய 17 வயது சிறுவனை கைது செய்தனர்.