இளம்பிள்ளை அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

இளம்பிள்ளை அருகே நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியானான்.

Update: 2022-09-11 21:24 GMT

இளம்பிள்ளை:

சிறுவன்

இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மகன் நவீன் குமார் (15), 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில் சிறுவன் நவீன்குமார், நேற்று எர்ணாபுரம் நம்பையாம்பட்டியில் உள்ள ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான்.

ஏரியின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு சென்றுவிட்டு மீண்டும் அதே கரைக்கு நவீன்குமார் தண்ணீரில் நீந்தி வந்தான். அப்போது தண்ணீரில் நீந்தி வர முடியாமல் தத்தளித்த அவன் திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டான்.

இதை பார்த்த அவனது நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சல் போடவே, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஏரியில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மயங்கிய நிலையில் மீட்டனர்.

சாவு

பின்னர் அவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நவீன் குமார் இருந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்