பஸ் நிலையத்துக்குள் புகுந்த காட்டெருமை

குன்னூர் பஸ் நிலையத்துக்குள் புகுந்த காட்டெருமையால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.;

Update: 2023-05-17 21:00 GMT

குன்னூர்

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக காட்டெருமைகள் குடியிருப்புகளில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் காட்டேரி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்தது. பின்னர் லெவல் கிராசிங் வழியாக குன்னூர் பஸ் நிலையத்திற்குள் புகுந்தது. அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் காட்டெருமையை பார்த்து உடன் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 15 நிமிடம் பஸ் நிலையத்தில் காட்டெருமை சுற்றித்திரிந்தது. பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அந்த காட்டெருமையை குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்