இரவில் நடமாடிய கரடியால் பரபரப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் இரவில் நடமாடிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-16 19:40 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் 6-வது வார்டு வடக்கு தெரு ரேஷன் கடை அருகில் நேற்று முன்தினம் இரவில் கரடி நடமாடியது. அந்த வழியாக கரடி சென்ற காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியிருப்பு பகுதியில் கரடி நடமாடியதால் மக்கள் அச்சத்துடனே உள்ளனர். எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்