குடியிருப்பில் உலா வந்த கரடி

கோத்தகிரி அருகே குடியிருப்பில் உலா வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-06 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்கள் மட்டுமின்றி, சாலைகள், குடியிருப்பு பகுதிகளிலும் கரடிகள் குட்டிகளுடன் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி அருகே அரவேனு, சேலாடா பகுதியில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் கரடி தொடர்ந்து உலா வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அந்த வழியாக வந்த வாகனத்திற்கு வழிவிடாமல் சாலையிலேயே நீண்ட தூரம் சாவகாசமாக நடந்து சென்றது. பின்னர் அருகில் இருந்த புதர் மறைவில் சென்று கரடி மறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்