கோத்தகிரி கடைவீதி குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி

கோத்தகிரி கடைவீதி குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி

Update: 2023-09-06 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள கோத்தகிரி கடைவீதி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சண்முகம் என்பவரது வீட்டு வளாகத்தில் நுழைந்த கரடி ஒன்று கதவு வரை சென்றது. கதவு மூடப்பட்டு இருந்ததால் வாசலில் சற்று நேரம் உலா வந்தது. பின்னர் அங்கிருந்து வெளியே சென்றது. இந்த காட்சியை வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக மொபைல் போனில் படம் பிடித்தனர். இது குறித்து தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்