தேயிலை தோட்டத்தில் கரடி உலா

தேயிலை தோட்டத்தில் கரடி உலா வந்ததால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2022-09-13 15:52 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே கன்னிகாதேவி காலனி குடியிருப்பு பகுதியில் தேயிலை தோட்டத்தை ஒட்டி செல்லும் நடைபாதையில் கரடி ஒன்று நடமாடி வருகிறது. சில நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை தாக்குவதற்காக துரத்தி வருகிறது. மேலும் கரடி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. இதனால் பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும், நடைபாதை வழியாக குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்து உள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் தொடர்ந்து உலா வரும் கரடி பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு, கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்