முதுமலை-மைசூரு சாலையில் படுத்து வாகனங்களை மறித்த கரடி குட்டி

முதுமலையில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் கரடி குட்டி ஒன்று வந்து படுத்து கிடந்து வாகனங்களை வழிமறித்தது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-06-08 11:44 GMT

கூடலூர், ஜூன்.9-

முதுமலையில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் கரடி குட்டி ஒன்று வந்து படுத்து கிடந்து வாகனங்களை வழிமறித்தது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாலையில் படுத்த கரடி குட்டி

கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் முதுமலைக்கு அடுத்தபடியாக கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. முதுமலை-மைசூர் சாலையில் சில நேரங்களில் வனவிலங்குள் உலா வருவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் முதுமலையில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரடி குட்டி ஒன்று சில தினங்களுக்கு முன்பு வந்தது. பின்னர் சாலையின் நடுவில் உச்சி வானத்தை பார்த்தவாறு படுத்தது. இதைக்கண்ட டிரைவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் அப்படியே நிறுத்தினர்.

சமூக வலைதளங்களில் வைரல்

சிறிது நேரம் படுத்துக் கிடந்த கரடி, தொடர்ந்து எழுந்து அங்குமிங்கும் பார்த்தப்படி சாலையில் நடந்தவாறு சென்றது. இதனை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து கரடி குட்டி வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, வழக்கமாக காட்டு யானைகள் கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து சென்றுவிடும். ஆனால் கரடிக்குட்டி குறும்பு செய்யும் வகையில் நடுரோட்டில் படுத்துக் கிடந்து சுட்டித்தனம் செய்தது. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்