கிணற்றில் குதித்து வங்கி ஊழியர் தற்கொலை

வங்கி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-28 19:32 GMT

வங்கி ஊழியர்

விராலிமலை தாலுகா, ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட வேலப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் தஞ்சாவூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மாரிக்கண்ணு (36). இவர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கனரா வங்கியில் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தம்பதியினர் வேலைக்கு சென்று விடுவதால் அவர்களது குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக மாரிக்கண்ணு தனது தங்கையை அவரது வீட்டில் தங்க வைத்து இருந்துள்ளார்.

இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக மாரிக்கண்ணு கடந்த ஒரு வருடத்திற்குள் 2 முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

கிணற்றில் குதித்து தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலை ரமேஷ் தஞ்சாவூரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு சென்று விட்டார். மாரிக்கண்ணு தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வங்கிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் அவர் வீட்டின் அருகே உள்ள துரை என்பவரது 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கீரனூர் தீயணைப்பு வீரர்கள் மாரிக்கண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிக்கண்ணுவின் கணவர் ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்