டிராக்டர் கவிழ்ந்து 9 வயது சிறுவன் பலி

வாணாபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து 9 வயது சிறுவன் பலி

Update: 2022-07-22 16:45 GMT

வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்ராவந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் மணி.

இவரது மகன் சந்தோஷ் (வயது 9) அதே பகுதியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் வாணாபுரம் அருகே சே.கூடலூரில் தனது உறவினர் டிராக்டரில் அமர்ந்து சென்று கொண்டிருந்தான்.

ஏரிக்கரை அருகே சென்றபோது டிராக்டர் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த சந்தோசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்த புகாரின்பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்