70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு-வாலிபருக்கு வலைவீச்சு

70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு தந்தது தொடர்பாக வாலிபர் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-27 19:16 GMT

வேலூர்,

70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு தந்தது தொடர்பாக வாலிபர் தேடி வருகின்றனர்.

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. திருமணம் ஆகாத இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு மூதாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். வெயிலின் அனல் காரணமாக வீட்டின் கதவை அவர் தாழ்பாள் இடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரது வீட்டிற்குள் நுழைந்தார். அதைக்கண்டு மூதாட்டி திடுக்கிட்டு அவரிடம் எதற்காக வீட்டிற்குள் வந்தாய் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்காத வாலிபர் திடீரென மூதாட்டியை பலவந்தமாக பிடித்து கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்,பக்கத்தினர் வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். அப்போது வாலிபர் எதிர்பாராத வேளையில் பொதுமக்களிடம் இருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்