சூறாவளி காற்றில் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசியதில் 7 மாத குழந்தை படுகாயம்

வேப்பந்தட்டை அருகே சூறாவளி காற்றில் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசியதில் 7 மாத குழந்தை படுகாயம் அடைந்தது.

Update: 2023-06-02 19:10 GMT

சூறாவளி காற்று

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவரது மனைவி மலர்தேவி (23). இவர்களுக்கு மகிழினி என்ற 7 மாத குழந்தை உள்ளது. இவர்கள் மறவநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

நேற்று மாலை அந்த பகுதியில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது ராஜா குடியிருந்த வீட்டின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. அப்போது வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த குழந்தை மகிழினிக்கு படுகாயம் ஏற்பட்டது.

சிகிச்சை

இதில் காயமடைந்த மகிழினியை அருகே இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்