மீன்வலையில் சிக்கிய 7 அடி நீளமலைப்பாம்பு பிடிபட்டது

மீன்வலையில் சிக்கிய 7 அடி நீளமலைப்பாம்பு உயிருடன் பிடிபட்டது.;

Update: 2022-12-06 19:00 GMT

பெரம்பலூரை அடுத்த ஆலம்பாடி பெரிய ஏரியில் சிலர் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து மீன்பிடிக்கும் வலையில் சிக்கிக்கொண்டது. இதைப்பார்த்த கிராம மக்கள் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் மீட்பு படைவீரர்கள் ஆலம்பாடி பெரிய ஏரிக்கு விரைந்தனர். 7 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு வனக்காப்பாளர் அன்பரசு மற்றும் வனக்காவலர் அறிவுச்செல்வன் ஆகியோர் அந்த மலைப்பாம்பை ஒரு வாகனத்தில் எடுத்து சென்று லாடபுரம் பச்சைமலைத்தொடரில் மயிலூற்று அருவி அருகே அமைந்துள்ள புலியூர் காப்புக்காட்டில் விட்டனர். இதேபோன்று ஆலம்பாடி பெரிய ஏரியில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு மலைப்பாம்பு மீன்வலையில் பிடிபட்டது. அதனை வனத்துறையினர் உயிருடன் பிடித்து பச்சைமலையில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்