மாட்டு கொட்டகையில் பதுங்கிய 7 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது
நாட்டறம்பள்ளி அருகே மாட்டு கொட்டகையில் பதுங்கிய 7 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மாட்டு கொட்டகையில் நாகப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மாட்டு கொட்டகையில் பதுங்கியிருந்த 7 அடி நீள நாகப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனை அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.