திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 68 வயது பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 68 வயது பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Update: 2022-07-22 18:30 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 68 வயது பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 68). இவருக்கு கடந்த 3 வருடங்களாக நடக்க முடியாமல் படுக்கையில் அவதியுற்றார். ெபான்னம்மாளை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிேசாதனை ெசய்தபோது மூட்டு எலும்பு தேய்மானம் இருந்ததால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து ஆலோசனையின்பேரில் தலைமை மருத்துவர் குமரவேல் தலைமையில் மயக்கவியல் பிரிவு டாக்டர் சத்திய நாராயணன், எலும்பு முறிவு டாக்டர்கள் செல்வநாதன், சிவகுமார், பாஸ்கர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பொன்னம்மாளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை அவர்கள் வெற்றிகரமாக செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்