உல்லாசம் வேண்டும்..! குழந்தை வேண்டாமாம்..! : 33 வயது மனைவியுடன் உடலுறவு வைத்த 62 வயது முதியவர்

கோட்டக்குப்பம் அருகே கொடூரமாக தாக்கி 33 வயது மனைவியிடம் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்த 62 வயது முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-03-03 10:25 GMT

கோட்டக்குப்பம்,

கோட்டக்குப்பம் அடுத்த பழையபட்டினச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 62.) பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்.

இவர் கடந்த ஆண்டு (2023) அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணை 2-வதாக இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன சில நாட்களிலேயே அந்த பெண் கணவர் முகமது இஸ்மாயிலுடன் வாழாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில் அந்த பெண் வானூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அதில் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதற்காக, பெண் கேட்டு வந்த முகமது இஸ்மாயிலுக்கு தன்னுடைய பெற்றோர் பெண் தர மறுத்து விட்டனர். தனக்கு யாரும் ஆதரவு இல்லை எனவும் கெஞ்சி என்னை பெண் கேட்டதால் எனது பெற்றோர் சம்மதித்தனர். ஆனால் அவர் திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்று தன்னை நல்லபடியாக வைத்துக் கொள்வதாக உறுதியளித்தார். அதேநேரத்தில் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய மறுத்துவிட்டார்.

மேலும் முழு நேரமும் பாலியல் சிந்தனையுடன் தன்னிடம் உல்லாசமாக இருப்பதையே குறிக்கோளாக இருந்து வந்தார். தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டார்.

ஆனாலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. உடலுறவுக்கு நான் மறுத்ததால் தன்னை கொடூரமாக தாக்கி இயற்கைக்கு மாறான வகையில் தன்னுடன் அவர் உடலுறவு வைத்துக் கொண்டதால் உடலில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டேன்.

உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இதற்காக ரூ.3 லட்சம் வரை மருத்துவ செலவு ஆகிவிட்டது. முகமது இஸ்மாயில் எனக்கு சிகிச்சை அளிக்கவும் மறுத்துவிட்டார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரலட்சுமி, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இஸ்மாயில் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் முகமது இஸ்மாயில் மீது பெண் வன்கொடுமை, நம்ப வைத்து ஏமாற்றுதல், மரணத்தை விளைவிக்கும் வகையில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சற்குணம், வழக்கு பதிவு செய்தார். மேலும் தலைமறைவான முகமது இஸ்மாயிலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்