ஆசிரியையிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

திண்டுக்கல்லில் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.;

Update:2023-07-03 01:15 IST

திண்டுக்கல் திருநகர் ஜி.டி.என். சாலையை சேர்ந்தவர் ஜாய். அவருடைய மனைவி பிரான்சிஸ் மரிய ரோசி (வயது 36). இவர், செந்துறையை அடுத்த பெரியூர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று மாலை பிரான்சிஸ் மரிய ரோசி, தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கு மரியநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். பின்னர் ஜாய் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் பிரான்சிஸ் மரிய ரோசியும் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் அனுமந்தநகர் ரெயில்வே மேம்பாலத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், கண்இமைக்கும் நேரத்தில் பிரான்சிஸ் மரிய ரோசி அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரான்சிஸ் மரிய ரோசி, இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்