கோவில் கும்பாபிஷேக விழாவில் ெபண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு

ஆரணி சைதாப்பேட்டையில் கோவில் கும்பாபிஷேக விழாவில் ெபண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்்.

Update: 2023-06-29 10:05 GMT

ஆரணி

ஆரணி சைதாப்பேட்டை மேட்டு தெருவில் உள்ள சிவசுந்தர விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.

விழாவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதில் முள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மனைவி சரளா தேவி (வயது 63) என்பவரும் கும்பாபிஷேகத்தை பார்க்க வந்திருந்தார்.

கூட்ட நெரிசிலை பயன்படுத்தி மர்ம நபர்கள் இவர் கழுத்தில் அணிந்திருந்த 6½ தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் நகைகளை பறிகொடுத்த சரளா தேவி அழுது புலம்பினாள்.

அப்போது அங்கு வந்த ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அப்பெண்ணிடம் நகைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து நகைளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்