வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறித்து செல்லப்பட்டது.
ஆலங்குடி அருகே காளையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சுமித்ரா (வயது 23). இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சுமித்ரா கணவனை பிரிந்து காளையன்தோப்பில் உள்ள தனது தந்தை ராமலிங்கம் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு சுமித்ரா அவரது வீட்டில் தந்தை, தாய் ஜெயலட்சுமி, சகோதரி சுமதி ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் பின்பக்க கதவை திறந்து உள்ளே வந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த சுமித்ரா கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சுமித்ரா ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், விசாரணை நடத்தி வருகின்றனர்.