தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு

கொள்ளிடம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-04-17 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விவசாய தொழிலாளி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சி குமிளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 38). தொழிலாளி. இவருடைய மனைவி அபிநயா(28). சம்பவத்தன்று அபிநயா தனது மகனுடன் வீட்டில் தூங்கிகொண்டிருந்தார்.அப்போது 3 மர்ம நபர்கள் லட்சுமணனின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்தனர்.

சங்கிலி பறிப்பு

அப்போது அபிநயாவுடன் இருந்த மூன்று வயது ஆண் குழந்தை அழ தொடங்கியது. அப்போது திடீரென மர்ம நபர்கள் அபிநயா(28)கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்த தகவலின் பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் அந்த வீடுகளில் பதிவான கைரேகைகளை சேகரித்து சென்றனர். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்