6 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது
சென்னாவரம் கிராமத்தில் 6 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது;
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமம் ஐயாக்கன்னு தெருவைச் சேர்ந்தவர் தெரேசா பெரியநாயகம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.
இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பொருளை எடுக்க சென்ற போது அங்கு ஒரு பாம்பு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை பொன்னூர் காப்புக்காட்டில் விட்டனர்.