மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியில் 5 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியில் 5 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை அறக்கட்டளை சார்பில் இலவசமாக செய்யப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவன் துருவா ( வயது 5). பிறந்த நாள் முதல் சிறுநீரக பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து துருவாவின் சிறுநீரகத்தை மாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. துருவாவின் அத்தை ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார். உடனடியாக அவர்கள் இருவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தலைமை டாக்டர் நீலமேகன் தலைமையில் மருத்துவக்குழு டாக்டர்கள் நேற்று வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்தனர். தற்போது துருவா நலமுடன் உள்ளான்.
இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு மற்ற ஆஸ்பத்திரிகளில் ரூ.12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை செலவாகும். இவை அனைத்தும் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி அறக்கட்டளை சார்பில் இலவசமாக செய்யப்பட்டது. மேல்மருவத்தூரில் இயங்கி வரும் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனைத்து விதமான அறுவை சிகிச்சைக்கான முன்னணி ஆஸ்பத்திரியாக திகழ்கிறது.
இந்த ஆஸ்பத்திரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அதற்குண்டான பணிகளை செய்து வருகின்றன விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆஸ்பத்திரியில் செய்யப்படும் எனவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.