தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுவன் பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுவன் பலியானான்.
பழைய காட்பாடியில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் காட்பாடியில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மகன் நிதிஷ்குமார் (வயது 4). சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிதிஷ்குமார் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான். விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தேடியபோது தண்ணீர் தொட்டியில் நிதிஷ்குமார் இறந்த கிடந்தது தெரியவந்தது. இதனை பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இது குறித்து ராஜ்குமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.