பெண் பக்தரிடம் 4½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சமயபுரம் கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
லால்குடி அருகே உள்ள தாப்பாய் புது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சித்ரா (வயது 40). இவர் நேற்று முன்தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருவதற்காக லால்குடியில் இருந்து அரசு பஸ்சில் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட்டில் வந்து இறங்கியுள்ளார்.
பின்னர் சமயபுரம் செல்லும் பஸ்சில் ஏறி சமயபுரம் நால்ரோட்டில் வந்து இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. ஓடும் பஸ்சில் யாரோ சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.