30 கிலோ எடை கொண்ட கடல் விரால் மீன்

30 கிலோ எடை கொண்ட கடல் விரால் மீன் ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம் போனது,

Update: 2022-09-22 17:36 GMT

கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீன் பிடித்துக் கொண்டு வழக்கம்போல் இன்று மீனவர்கள் கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மீனவர் ஒருவர் வலையில் 30 கிலோ எடை கொண்ட கடல் விரால் மீன் சிக்கியது. இந்த கடல் விரால் மீன் மிகவும் அரியவகை மீனாக பார்க்கப்படுகிறது. இந்த மீன் சுவை அதிகம் என்பதால் மீனின் விலையும் அதிகம் ஆகும். 30 கிலோ எடை கொண்ட கடல் விரால் மீன் ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்