விஷப்பூச்சி கடித்து 3 வயது குழந்தை சாவு
கொரடாச்சேரி அருகே விஷப்பூச்சி கடித்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே விஷப்பூச்சி கடித்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷப்பூச்சி கடித்தது
கொரடாச்சேரி அருகே திட்டாணிமுட்டம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி வேதநாயகி. இவர்களுக்கு தட்சயா (வயது 3) என்ற மகள் இருந்தார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தட்சயாவை விஷப்பூச்சி கடித்ததால் அழுதுள்ளது.
குழந்தை சாவு
இதை தொடர்ந்து பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தட்சயா பரிதாபமாக உயிரிழந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து சிறுமியின் தாயார் வேதநாயகி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷப்பூச்சி கடித்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.