3 அடி நல்லப்பாம்பு பிடிபட்டது

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 அடி நல்லப்பாம்பு பிடிபட்டது

Update: 2022-09-27 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று காலை தூய்மைப்பணியாளர்கள் துப்புரவு பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது சுமார் 3 அடி நீள முள்ள நல்லப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து நல்லப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்