பிறந்து 3 நாட்களே ஆன ஆண் சிசு சாக்கடையில் வீச்சு
பிறந்து 3 நாட்களே ஆன ஆண் சிசு சாக்கடையில் வீசப்பட்டது.
கீரனூர் தெற்கு ரத வீதியில் சாக்கடை செல்லும் கால்வாய் பகுதியில் பிளாஸ்டிக் பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சிசு இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார், பேரூராட்சி பணியாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் சிசுவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.