பண்ருட்டியில் கார் கண்ணாடியை உடைத்து பெண்ணிடம் நகை பறிப்பு 17 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

பண்ருட்டியில் கார் கண்ணாடியை உடைத்து பெண்ணிடம் நகை பறித்த 17 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-16 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது 57). இவர் நேற்று முன்தினம் தனது மகள் வைஷ்ணவி, மருமகன் மணிவண்ணன், மணிவண்ணனின் தம்பி மணிசங்கர் ஆகியோருடன் காரில் பண்ருட்டி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றார். அங்கு காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு கும்பல் திடீரென காரை வழிமறித்து, காரை எங்கள் மீது மோத வருகிறாயா? என கேட்டு கையில் வைத்திருந்த தடியால் சரமாரியாக காரை அடித்தனர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இதில் கண்ணாடி சிதறல் பட்டு வைஷ்ணவி, மணிவண்ணன், மணிசங்கர் ஆகியோர் காயமடைந்தனர்.

17 பேருக்கு வலைவீச்சு

மேலும் வைஷ்ணவியை காரில் இருந்து கீழே தள்ளிய அந்த கும்பல், கொலை மிரட்டல் விடுத்ததோடு அவர் வைத்திருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பெருமாள், பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பாரதி நகரை சேர்ந்த இளங்கோவன், மோகன், விஷ்வா, செல்வகுமார், கலையரசன், ரவிக்குமார், பாபு உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்